Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகவும் தடைகளை மீறியதாகவும் Huawei மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

Huawei , நிறுவனங்களின் வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகவும் ஈரானில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கண்டுபிடிக்க உதவியதாகவும் அமெரிக்க அரசாங்கத் தரப்பு வழக்குரைஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வாசிப்புநேரம் -

Huawei , நிறுவனங்களின் வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகவும் ஈரானில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கண்டுபிடிக்க உதவியதாகவும் அமெரிக்க அரசாங்கத் தரப்பு வழக்குரைஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தொலைத்தொடர்புக் கருவிகளைச் செய்யும் உலகின் ஆகப் பெரிய நிறுவனமான Huaweiக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீடித்து வரும் பூசல்களை மோசமடையச் செய்துள்ளது இந்த வழக்கு.

சீன நிறுவனமான Huawei, ஆறு அமெரிக்க நிறுவனங்களின் வர்த்தக ரகசியங்களைத் திருட, சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

அதோடு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நாடுகளுடன் அது தொடர்பில் உள்ளதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

2009இல் தெஹ்ரானில் இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குபெற்றவர்களை அடையாளங்கண்டு கைதுசெய்ய Huawei கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தியதாக அமெரிக்கா குற்றச்சாட்டியுள்ளது.

அமெரிக்கா போட்டியின் காரணமாகத் தனக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளதாக Huawei பதில் அளித்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்