Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பெயர்பெற்ற பல்கலைக் கழகத்தில் மகளைச் சேர்க்க கையூட்டு கொடுத்த நடிகைக்குச் சிறை

பெயர்பெற்ற பல்கலைக் கழகத்தில் மகளைச் சேர்க்க கையூட்டு கொடுத்த அமெரிக்க நடிகைக்கு இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
பெயர்பெற்ற பல்கலைக் கழகத்தில் மகளைச் சேர்க்க கையூட்டு கொடுத்த நடிகைக்குச் சிறை

(படம்: Reuters/Brian Snyder)

பெயர்பெற்ற பல்கலைக் கழகத்தில் மகளைச் சேர்க்க கையூட்டு கொடுத்த அமெரிக்க நடிகைக்கு இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

"Desperate Housewives" நாடகத் தொடர் மூலம் புகழ்பெற்ற ஃபெலிடிசி ஹஃப்மன் (Felicity Huffman) அந்தக் குற்றத்தைக் கடந்த மே மாதம் ஒப்புக்கொண்டார்.

அவருக்கு 30,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், 250 மணி நேரத்துக்கு அவர் சமூகச் சேவையிலும் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமது மகளின் கல்லூரிக்கான தகுதி தேர்வு மதிப்பெண்களை உயர்த்த 15,000 டாலரை ஹஃப்மன் கொடுத்திருந்தார்.

தங்கள் செல்வாக்கையும் செல்வத்தையும் பயன்படுத்தி மற்ற பிள்ளைகளின் வாய்ப்புகளைக் கெடுத்துவிடக்கூடாது என்பதை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கூறினார்.

அத்தகைய வழக்கை மேலும் சுமார் 50 பேர் எதிர்நோக்குகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்