Images
  • Humpback Whale
    (படம்:  Twitter/SimonWest26)

தேம்ஸ் ஆற்றில் மாண்டுகிடந்த திமிங்கிலம்


இங்கிலாந்திலுள்ள தேம்ஸ் ஆற்றில் (River Thames) இவ்வாரம் காணப்பட்ட 10 மீட்டர் நீளத் திமிங்கிலம் லண்டனின் கிழக்குப் பகுதியில் மாண்டுகிடக்கக் காணப்பட்டது.

அந்த humpback திமிங்கிலத்தின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக ஆய்வாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.

திமிங்கிலம் ஏன் தேம்ஸ் ஆற்றுப்பகுதியை அடைந்தது, அது எப்படி மாண்டது என்பது குறித்து லண்டனின் விலங்கியல் சங்கம் விசாரணை நடத்தும்.

இதற்குமுன் இரு humpback திமிங்கிலங்கள் தவறுதலாக தேம்ஸ் ஆற்றுப்பகுதியை அடைந்தன. பின்னர் அவை இரண்டும் மாண்டன.

திமிங்கிலங்களைப் பொழுதுபோக்குக்காக வேட்டையாடுவதற்குத் தற்காலிகத் தடைவிதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதனால் அவை தவறுதலாக மற்ற நீர்ப்பகுதிகளில் திரியும் போக்கும் அதிகரித்துள்ளது.  

Top