Images
  • Hurricane Michael
    (படம்: AP/David Goldman)

அமெரிக்காவில் வீசிய மைக்கல் சூறாவளியால் இதுவரை 17 பேர் மரணம்

அமெரிக்காவின் தென்கிழக்குக் கரையோரப் பகுதிகளில் வீசிய மைக்கல் சூறாவளியால் இதுவரை 17 பேர் மாண்டுவிட்டனர்.

ஃப்ளோரிடா, வெர்ஜீனியா ஆகிய மாநிலங்கள் சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

சூறாவளியால் தரைமட்டமான வீடுகளுக்குள் சிக்கியவர்களைத் தேடி மீட்கும் பணி தொடர்கிறது.

மைக்கல் சூறாவளி, நம்பமுடியாத அளவிற்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஃபுளோரிடா மாநில ஆளுநர் ரிக் ஸ்காட் (Rick Scott) தெரிவித்துள்ளார்.

உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உறுதி கூறியுள்ளார்.


 

Top