Images
  • huawei employees (1)
    (படம்: REUTERS/Stringer/File Photo)

Huawei நிறுவனத்துக்குத் தடை விதித்தது அமெரிக்கா

Huawei நிறுவனத்துக்கும், அதனுடன் தொடர்பு வைத்துள்ள 70 நிறுவனங்களுக்கும் அமெரிக்கா விதித்துள்ள தடை நடப்புக்கு வந்துள்ளது.

அதனால், அமெரிக்க அரசாங்கத்தின் அனுமதியின்றி அங்குள்ள நிறுவனங்கள் Huawei தயாரிக்கும் சாதனங்களையோ உதிரி பாகங்களையோ வாங்க முடியாது.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் நிறுவனங்கள், அமெரிக்காவுக்குப் பொருட்களை விற்பனை செய்வதை அதிபர் டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

அதனால், Huawei நிறுவனத்தின் வர்த்தகத்துக்குப் பேரிழப்பு ஏற்படக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  

Top