Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தூக்கத்தில் இருந்தவரை இழுத்துச் சென்று கொன்ற கழுதைப்புலிகள்

ஸிம்பாப்வேயின் (Zimbabwe) சிருமன்ஸு (Chirumanzu) என்ற கிராமத்தில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஆடவர் ஒருவரைக் கழுதைப்புலிகள் (hyenas) இழுத்துச் சென்று கொன்றுவிட்டன.

வாசிப்புநேரம் -
தூக்கத்தில் இருந்தவரை இழுத்துச் சென்று கொன்ற கழுதைப்புலிகள்

(படம்: Reuters)

ஸிம்பாப்வேயின் (Zimbabwe) சிருமன்ஸு (Chirumanzu) என்ற கிராமத்தில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஆடவர் ஒருவரைக் கழுதைப்புலிகள் (hyenas) இழுத்துச் சென்று கொன்றுவிட்டன.

அந்த 87 வயது முதியவர், தமது குடிசை வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாக CNN செய்தி நிறுவனம் கூறியது.

இந்த ஆண்டு, ஸிம்பாப்வேயில் வனவிலங்குகளுக்குப் பலியான 60வது நபர் அவர்.

ஊர் மக்கள் அவருடைய உடலைக் கண்டுபிடித்தபோது, உடலின் கீழ்ப் பகுதியைக் காணவில்லை.

கழுதைப்புலிகளை அழிப்பதற்காக, பூங்காக் காவலர்கள் அவற்றைத் தேடி வருவதாக CNN தெரிவித்தது.

அதே கழுதைப்புலிகள் அந்த வட்டாரத்திலிருந்த கால்நடைகளையும் வேட்டையாடியதாக நம்பப்படுகிறது.

நிதிப் பற்றாக்குறையால், கழுதைப்புலிகளை மக்கள்தொகை குறைவாக இருக்கும் இடத்திற்கு மாற்ற முடியவில்லை என ஸிம்பாப்வேயின் பூங்கா, வனவிலங்கு நிர்வாக அதிகாரி குறிப்பிட்டார்.

அதிகரித்துள்ள விலங்குகளின் எண்ணிக்கையும் அதற்கு ஒரு காரணம் என்று அவர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்