Images
  • ice balls (1)
    (படம்:  Tarja Terentjeff / Instagram)

அரிய வானிலை நிகழ்வால் ஆயிரக்கணக்கான ஐஸ் பந்துகள்

ஃபின்லந்தில் ஓர் அரிய வானிலை நிகழ்வால், முட்டை வடிவத்தில் ஆயிரக்கணக்கான ஐஸ் பந்துகள் உருவாகியுள்ளன.

அந்த விநோதக் காட்சி, ஃபின்லந்துக்கும் ஸ்வீடனுக்கும் இடையில் உள்ள போத்னியா (Bothnia) வளைகுடாவில் உள்ள ஹெலுவோட்டோ (Hailuoto) தீவின் கரையோரத்தில் தென்பட்டது.

சிறிய ஐஸ் துண்டுகள் காற்றிலும் நீரிலும் உருண்டு திரண்டு, 'ஐஸ் பந்துகள்' உருவாகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஐஸ் பந்துகளைப் பார்க்கச் சென்ற வட்டார மக்கள், வியந்து போயினர்.

ஐஸ் பந்துகள் 30 மீட்டர் தூரம் வரை கரையோரத்தில் பரப்பிக் கிடந்தன.

பந்துகளின் விட்ட அளவு முட்டையின் அளவுக்கும் ஒரு காற்பந்தின் அளவுக்கும் இடைப்பட்டிருந்தது.

Top