Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'ஐஸ்' விவசாயமா?

ஜப்பானின் தோக்கியோ நகரின் மலைப் பகுதியில் சங்கு சத்தம்... 

வாசிப்புநேரம் -

ஜப்பானின் தோக்கியோ நகரின் மலைப் பகுதியில் சங்கு சத்தம்...

யுச்சிரோ யமாமோட்டோ என்பவர் இவ்வாண்டின் விளைச்சலுக்கு இயற்கையிடம் நன்றி தெரிவிக்கிறார்.

ஆனால் அவர் செய்யும் விவசாயமோ... 'ஐஸ்'.

ஜப்பானில் எஞ்சியுள்ள 'ஐஸ்' விவசாயிகளில் அவரும் ஒருவர்.

திறந்தவெளியில் உறையவைக்கக்கூடிய தண்ணீரைக் கொண்டு உயர்தர 'ஐஸ்' கட்டிகளை உருவாக்குகிறார் இவர்.

தோக்கியோவில் 'kakigori' எனும் அரைக்கப்பட்ட 'ஐஸ்' கட்டிகள் இனிப்புவகையாக விற்கப்படுகின்றன.

அவற்றுக்குப் பயன்படும் உயர்தர 'ஐஸ்' கட்டிகளை விவசாயம் செய்கிறார்கள் யமாமோட்டோ போன்றவர்கள்.

யமாமோட்டோ 13 ஆண்டுக்கு முன் இதனைத் தொடங்கினார்.

அப்போது அரைத்த ஐஸின் விலை 200 யென் (2 வெள்ளி).

ஆனால் இப்போது ஒரு கிண்ணம் அரைத்த ஐஸை 800 யென்னுக்கு விற்கிறார் யமாமோட்டோ.

குளிர்பதனப் பெட்டியில் தயாரிக்கப்படக்கூடிய ஐஸிலிருந்து வேறுபடுகிறது யமாமோட்டோவின் 'ஐஸ்'.

உயர்தர இனிப்புவகைகளைப் போன்று இயற்கை முறைகளில் உற்பத்தி செய்யப்படும் அரைத்த 'ஐஸ்' கட்டிகளுடன் பழக் கூழை அரைத்து விற்கிறார் யமாமோட்டோ.

'ஐஸ்' வாங்க யாருமில்லாமல் அதனை டன் கணக்கில் வீசியெறிந்த காலம் மலையேறிவிட்டது.

இப்போது 'ஐஸ்' விவசாயம் நன்கு சூடுபிடித்துள்ளதாகக் கூறுகிறார் யமாமோட்டோ.

இப்போது தேவை அதிகரித்துள்ள நிலைமையில் ஒவ்வோர் ஆண்டும் 160 டன் வரை ஐஸை உற்பத்தி செய்கிறார் யமாமோட்டோ.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்