Images
  • idai
    (படம்:AFP/ADRIEN BARBIER)

இடாய் சூறாவளிக்கு 1000 பேர் பலி

ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் கடந்த மாதம் வீசிய இடாய் சூறாவளிக்குப் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

மொஸாம்பிக், மலாவி, ஸிம்பாப்வே ஆகிய நாடுகளை இடாய் சூறாவளி பதம் பார்த்தது.

சூறாவளியால் பலத்த மழையும் கடும் வெள்ளமும் ஏற்பட்டன.

சேதங்களைச் சரிசெய்ய பாதிக்கப்பட்ட நாடுகளுக்குக் கிட்டத்தட்ட
2 பில்லியன் டாலர் தேவைப்படும் என்று உலக வங்கி தெரிவித்தது.

மொஸாம்பிக்கில் மட்டும் 602 பேர் மாண்டனர்.

ஸிம்பாப்வேயில் 344 பேர் பலியாயினர். மலாவியில் 60 பேர் மாண்டனர்.

இடாய் சூறாவளியால் கிட்டத்தட்ட 2 மில்லியனுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

Top