Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இந்தியாவில் IKEA : முதல் நாளில் போக்குவரத்து நெரிசல்

நேற்று பொதுமக்கள் கடைக்குள் உள்ளவற்றைச் சுற்றிப் பார்த்து வாங்கவதற்கான முதல் நாள்.

வாசிப்புநேரம் -
இந்தியாவில் IKEA : முதல் நாளில் போக்குவரத்து நெரிசல்

(படம்:@RJChaitu/Twitter)

நேற்று பொதுமக்களுக்குக் கடை திறந்துவிடப்பட்டது.

ஆயிரக்கணக்கானோர் ஹைதரபாத் நகரின் தொழில்நுட்ப நடுவத்தில் அமைந்துள்ள IKEA கடைக்குச் செல்ல விரைந்தனர்.

இருவழிகளிலும் போக்குவரத்து நெரிசல்.

நெரிசலில் மாட்டிக்கொண்டோர் தங்களின் ஆதங்கத்தைச் சமூக ஊடகங்களில் பதிவுசெய்தனர்.

போக்குவரத்து நெரிசலைக் காட்டும் படங்கள் பல இணையத்தில் பகிரப்பட்டன.

Twitterஇல் ஒருவர், தாம் 40 நிமிடம் பயணம் செய்து அலுவலகத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிவிடுவது வழக்கம் என்றும் அன்றைய நெரிசலினால் இரண்டு மணி நேரமாகிவிட்டது என்றும் குறைகூறினார்.

சுமார் 20 கிலோமீட்டர்வரை போக்குவரத்து நெரிசல் இருந்ததாகவும் தாம் வீடு திரும்ப 4 மணி நேரம் பிடித்ததாகவும் இன்னொருவர் சொன்னார்.

இப்படி பலரும் தங்கள் தாமதமான கதையை இணையத்தில் பகிர்ந்துகொண்டனர்.

(படம்: Twitter/Ashwinkumar)

சிலர் பிறருக்கு உதவும் வகையில் சாலை வரைபடங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
சாலைகளில் எங்கெல்லாம் போக்குவரத்து நெரிசலாகவுள்ளது என இணையவாசிகள் தெரிந்துகொண்டனர்.

நிலைமை குறித்து போக்குவரத்துக் காவல்துறை ஆலோசனை அறிக்கை வெளியிட்டது.

கடைக்குள்ளும் பரபரப்புக்குக் குறைவில்லை.

(படம்:NOAH SEELAM / AFP)

கடை ஊழியர்கள் நீலம், மஞ்சள் நிற ஆடைகளில் சுவீடன், இந்தியக் கொடிகள் ஏந்தியவாறு வாடிக்கையாளர்களை வரவேற்றனர்.

(படம்:NOAH SEELAM / AFP)

இதுவரை இணையத்தில் பார்த்த IKEA பொருட்களை நேரில் பார்க்க ஆர்வமாய் இருப்பதாகக் கூறினர் வாடிக்கையாளர்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்