Images
  • இகீ
    (படம்: REUTERS/Arnd Wiegmann)

2020ஆம் ஆண்டுக்குள் மின்வாகனங்களில் பொருட்களை விநியோகிக்க IKEA திட்டம்

2020ஆம் ஆண்டுக்குள் ஐந்து முக்கிய நகர்ப்பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை மின்வாகனங்கள் வழி கொண்டு சேர்க்கத் திட்டம் கொண்டுள்ளது IKEA நிறுவனம்.

ஆம்ஸ்டர்டாம், லாஸ் ஏஞ்சலஸ், நியூயார்க், பாரிஸ், ஷங்காய் போன்றவற்றில் உள்ள கடைகளிலிந்து வீடுகளுக்கு அறைகலன்களைக் கொண்டு செல்ல மின்வாகனங்களையோ, கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத வாகனங்களையோ பயன்படுத்தவிருப்பதாக IKEA சொன்னது.

2025ஆம் ஆண்டுக்குள் அதன் அனைத்து பொருட்களும் வாடிக்கையாளர்களுக்கு அத்தகைய வாகனங்களில் கொண்டுசெல்லப்படும் என்ற இலக்கைக் கொண்டிருப்பதாக அது தெரிவித்தது.

நீடித்து நிலைத்திருக்கும் வழியில் வர்த்தகத்தை மேம்படுத்துவது மிக முக்கியம். அதனால் ஐந்து நகர்ப்பகுதிகளில் மின்வாகனங்களின் பயன்பாட்டைத் துரிதப்படுத்துவதாக IKEA நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஸ்பர் பிரோடீன் தெரிவித்தார். 

 

Top