Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

புகழ்பெற்ற கட்டடக் கலை நிபுணர் I M பெய் காலமானார்

அமெரிக்காவின் புகழ்பெற்ற கட்டடக் கலை நிபுணர் யோ மிங் பெய் காலமானார். அவருக்கு வயது 102. 

வாசிப்புநேரம் -
புகழ்பெற்ற கட்டடக் கலை நிபுணர் I M பெய் காலமானார்

படம்: AFP

அமெரிக்காவின் புகழ்பெற்ற கட்டடக் கலை நிபுணர் யோ மிங் பெய் காலமானார். அவருக்கு வயது 102.

சிங்கப்பூரில் உள்ள ராஃபிள்ஸ் சிட்டி கட்டடம், OCBC சென்டர் கட்டடம்,  பீச் ரோட்டில் உள்ள கேட்வே கட்டடங்கள் ஆகியவை திரு பெய்யால் வடிவமைக்கப்பட்டவை. 

பாரிஸ் அரும்பொருளகத்திலுள்ள பிரபலமான Lourve pyramid-ஐ வடிவமைத்தவர் திரு. பெய்.

சீனாவில் பிறந்த அவர், ஹாங்காங்கில் உள்ள சீன வங்கியின் 72 மாடிக் கட்டடம், ஏதென்சில் உள்ள நவீனக் கலை அருங்காட்சியகம் ஆகியவற்றை வடிவமைத்ததில் முக்கியப் பங்காற்றியவர்.

தனித்துவமான அம்சங்களைக் கொண்டு வடிவமைத்த கட்டடங்களின் மூலம், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கட்டடக் கலை நிபுணர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார் திரு. யோ மிங் பெய். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்