Images
  • gita gopinath
    (படம்: Reuters)

அனைத்துலகப் பண நிதியத்தில் அமெரிக்க இந்தியப் பெண்ணுக்குப் புதிய பொறுப்பு

அமெரிக்க இந்தியரான கீதா கோபிநாத் அனைத்துலகப் பண நிதியத்தின் புதிய தலைமைப் பொருளாதார வல்லுநராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

தற்போது மாரீஸ் ஆப்ஸ்ட்ஃபெல்ட் (Maurice Obstfeld) அந்தப் பொறுப்பை வகித்து வருகிறார். அவருக்குப் பிறகு அந்தப் பொறுப்புக்கு வரும் முதல் பெண்மணி 46 வயது கீதா கோபிநாத்.

அவர், அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

American Economic Review சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் அவர் உள்ளார்.

இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெறும், அனைத்துலகப் பண நிதியத்தின் வருடாந்தரக் கூட்டத்தில் திருவாட்டி கீதாவின் புதிய பொறுப்பு பற்றி அறிவிக்கப்பட்டது. 

Top