Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அழிந்துவிடும் அபாயத்தில் தாய்மொழி... கவலையில் தவிக்கும் பழங்குடியின மக்கள்

கனடாவின் வடக்குப் பகுதியில் உள்ளது நுனாவுட் வட்டாரம். இனியுட் பழங்குடியினத்தவர் அங்கு வாழ்ந்து வருகின்றனர். அண்மைக்காலத்தில் அவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால் அவர்களின் (Inuktut) இனுக்டுட் தாய்மொழி அழிந்து போய்விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. 

வாசிப்புநேரம் -
அழிந்துவிடும் அபாயத்தில் தாய்மொழி... கவலையில் தவிக்கும் பழங்குடியின மக்கள்

படம்: AFP

கனடாவின் வடக்குப் பகுதியில் உள்ளது நுனாவுட் வட்டாரம். இனியுட் பழங்குடியினத்தவர் அங்கு வாழ்ந்து வருகின்றனர். அண்மைக்காலத்தில் அவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால் அவர்களின் (Inuktut) இனுக்டுட் தாய்மொழி அழிந்து போய்விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

2016 -ஆம் ஆண்டு கணக்குப்படி, நுனாவுட் வட்டாரத்தில் 65 விழுக்காடு இனியுட் இனத்தவர் வசிக்கின்றனர். 2001-ஆம் ஆண்டு அவர்களின் விகிதம் 72 விழுக்காடாக இருந்தது.

பல்வேறு கிளைமொழிகள் சேர்ந்தது இனுக்டுட் மொழி.
நுனாவுட் வட்டாரத்தில் வசிப்போரில் அதிகமானோர் தங்களுக்குள் இனுக்டுட் மொழியில் பேசிக்கொள்கிறார்கள். வீடுகளில் அந்த மொழியின் புழக்கம் இருக்கிறது. என்றாலும், பெரும்பாலோர் ஆங்கிலத்தையே அதிகம் புழங்குவதாகக் கனடாவின் புள்ளிவிவரம் கூறுகிறது.

இனியுட் பழங்குடியினத்தவருக்குத் தன்னாட்சி வழங்கும் வகையில் 1999 ஆம் ஆண்டு கனடாவின் வடமேற்கு வட்டாரத்திலிருந்து நுனாவுட் பிரிக்கப்பட்டது.

சுமார் 1.9 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வசிப்போரில் பெரும்பாலோர் இனியுட் இனத்தவர். 2016 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இனியுட் இனத்தவரில் 82 விழுக்காட்டினர் தங்கள் தாய்மொழியான இனுக்டுட்டுடன், ஆங்கிலத்தையும் பேசுகின்றனர். 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது அது 6 விழுக்காடு அதிகம்.

குறைந்து வரும் தாய்மொழிப் புழக்கத்தைப் பெருக்குவதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் இனியுட் இனத்தவருக்கு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

உலகம் முழுவதும் சுமார் 2,700 பழங்குடி மொழிகள் அழியக்கூடிய அபாயத்தில் இருப்பதாக இந்த ஆண்டு ஜனவரியில் ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்திருந்தது. நிலைமையை மாற்றத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால், அந்த மொழிகள் அழிந்து போய்விடும் என்றும் நிறுவனம் கூறியிருந்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்