Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தொடர்ந்து அதிகரிக்கவிருக்கும் வெப்பநிலை

உலக வெப்பமயமாதல் காரணமாகவும் பூமியின் மேற்பரப்பின் வெப்பநிலை இயற்கையாக அதிகரிப்பதாலும் அடுத்த ஐந்தாண்டுகள் மிகவும் வெப்பமாக இருக்கும் என்று புதிய ஆய்வு முன்னுரைத்துள்ளது.

வாசிப்புநேரம் -

பாரிஸ்: உலக வெப்பமயமாதல் காரணமாகவும் பூமியின் மேற்பரப்பின் வெப்பநிலை இயற்கையாக அதிகரிப்பதாலும் அடுத்த ஐந்தாண்டுகள் மிகவும் வெப்பமாக இருக்கும் என்று புதிய ஆய்வு முன்னுரைத்துள்ளது.

இந்த நிலையினால் புயல்கள், சூறாவளிகள் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.

பூமியின் மேற்பரப்பின் வெப்பநிலை எப்போதும் மாறிக்கொண்டிருப்பதாக பிரான்ஸில் பிரெஸ்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

100,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியின் வெப்பநிலை பெரும் அளவில் மாறும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனித உயிரினம் வாழ்வதற்கு உகந்தவாறு கடந்த 11,000 ஆண்டுகளாக வெப்பநிலையில் மாற்றம் பெரிதளவு இல்லை

கடந்த நூற்றாண்டில் மனிதர்களின் செயல்களால் ஏற்படும் பருவநிலை மாற்றம் இயற்கையாக ஏற்படும் வெப்ப அதிகரிப்பை மேலும் மோசமடையச் செய்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்