Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இந்தியாவிலிருந்து திரும்புவதற்கு விதிக்கப்பட்ட தடையை மீறினால் சிறைத் தண்டனை? -ஆஸ்திரேலியப் பிரதமர் விளக்கம்

இந்தியாவிலிருந்து திரும்புவதற்கு விதிக்கப்பட்ட தடையை மீறினால், சிறைத் தண்டனை விதிக்கப்பட பெரும்பாலும் சாத்தியமில்லை என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

இந்தியாவிலிருந்து திரும்புவதற்கு விதிக்கப்பட்ட தடையை மீறினால், சிறைத் தண்டனை விதிக்கப்பட பெரும்பாலும் சாத்தியமில்லை என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) தெரிவித்துள்ளார்.

வரும் 15 ஆம் தேதி வரை இந்தியாவுக்குச் சென்றுவிட்டு, நாடு திரும்பும் ஆஸ்திரேலியர்களுக்குச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என முன்னர் கூறப்பட்டது.

அதனை தொடர்ந்து, திரு. மோரிசனின் நிர்வாகம், இனவாதக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியது.

ஆஸ்திரேலியர்கள் சுமார் 9,000 பேர் இந்தியாவில் உள்ளனர்.

Indian Premier League ஆட்டங்களில் பங்கேற்கும் வீரர்களும் அவர்களில் அடங்குவர்.

இந்தியாவிலிருந்து திரும்ப விதிக்கப்பட்ட தடை குறித்து, கிரிக்கெட் முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் (Michael Slater) திரு. மோரிசனைச் சாடினார்.

"எங்களின் பாதுகாப்பில் அக்கறை இருந்தால், நாங்கள் நாடு திரும்ப அரசாங்கம் அனுமதிக்கும்" என்று திரு. ஸ்லேட்டர் சொன்னார்.

இருப்பினும், பிரதமர் மோரிசன் தம்முடைய முடிவைத் தற்காத்து பேசினார்.

கிருமிப்பரவலை முறியடிக்க இக்கட்டான சில முடிவுகள் எடுக்க நேர்ந்ததைத் திரு. மோரிசன் சுட்டினார். ஆஸ்திரேலியாவைத் தோல்வியடையச் செய்யப் போவதில்லை. மாறாக, இம்முறை எல்லைகளைப் பாதுகாக்கப் போவதாக அவர் சொன்னார்.

-AFP/kg 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்