Images
  • india reuters
    (படம்: Reuters)

COVID-19 நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த இன்னும் வலுவான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்திய அரசாங்கம் மீது நெருக்குதல் அதிகரிக்கிறது

இந்தியாவில் COVID-19 நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த இன்னும் வலுவான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் மீதான நெருக்குதல் அதிகரித்துவருகிறது.

தலைநகர் புதுடில்லியில் போதுமான உயிர்வாயு கிடைப்பதை, உள்ளூர் நேரப்படி இன்று நள்ளிரவுக்குள் உறுதிசெய்யும்படி உச்ச நீதிமன்றம் பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகத்திடம் கூறியது.

உயிர்வாயு இருப்பை அதிகரித்தல், அவசரகாலப் பொருள்களை முறையாக விநியோகம் செய்தல், தடுப்பூசி விலை, மருந்துகள் குறித்த விவரங்களை மறு-ஆய்வு செய்தல், இரண்டு வாரங்களுக்குள் மருத்துவமனைச் சேர்க்கை குறித்த தேசியக் கொள்கையை வகுத்தல் ஆகியவற்றுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு பிரதமர் மோடியின் நிர்வாகம் எவ்வாறு பதிலளிக்கும் என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

தற்போது nitrogen ஆலைகளை உயிர்வாயு ஆலைகளாக மாற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகத் திரு. மோடி கூறியிருக்கிறார்.

கிருமித்தொற்றுக்கு எதிரான பணிக்குழுவின் முக்கிய உறுப்பினர்கள், நாடளாவிய முடக்கநிலைக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் வேலை இழப்பு நேரிடும் என்ற அச்சத்தால், முடக்கநிலையை அறிவிக்க திரு மோடி மறுத்துவருகிறார்.

Top