Images
  • india elections (1)
    (படம்: AFP/DIBYANGSHU SARKAR)

இந்தியா: தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 பகுதிகளில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு

இந்தியாவில் இன்று சுமார் 175 மில்லியன் பேர் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

கொல்கத்தாவில் சில வாக்குப்பதிவு நிலையங்களில் வன்முறை வெடித்தது.

அதில் சுமார் 20 பேர் காயமடைந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

கொரோனா நோய்த்தொற்று, கலவரம் போன்ற காரணங்களால் மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப் பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அம் மாநிலத் தேர்தலின் கடைசிக் கட்டம் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும்.

இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி மேற்கு வங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்ற தீவிர முயற்சி எடுத்துவருகிறது.

ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தது.

தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் (மே) இரண்டாம் தேதி வெளிவரும்.

- AFP 

Top