Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 தடுப்பூசியைப் பெற இந்தியாவிற்கு முன்னுரிமை

COVID-19 தடுப்பூசியைப் பெற இந்தியாவிற்கு முன்னுரிமை

வாசிப்புநேரம் -
COVID-19 தடுப்பூசியைப் பெற இந்தியாவிற்கு முன்னுரிமை

(கோப்புப் படம்: AP)

பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள AstraZeneca/Oxford தடுப்புமருந்தைப் பெற இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்புமருந்தைத் தயாரிக்கும் Serum Institute of India நிறுவனம், இதுவரை 40 மில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்திருப்பதாய்த் தெரிவித்துள்ளது.

ஜனவரிக்குள் அந்த எண்ணிக்கை 100 மில்லியனை எட்டக்கூடும்.

தடுப்பூசிகளில் 90 விழுக்காடு, இந்திய அரசாங்கத்திற்கு விற்கப்படும் என்று நிறுவனம் கூறியது.

அரசாங்கத்துக்கு விற்கப்படும் தடுப்பூசியின் விலை சுமார் 250 ரூபாயாக இருக்கும் (4.50 வெள்ளி).

எஞ்சிய 10 விழுக்காட்டுத் தடுப்பூசிகள் தனியார் சந்தையில் 1,000 (18 வெள்ளி) ரூபாய்க்கு விற்கப்படக்கூடும்.

அவசரகாலத்தில் பயன்படுத்துவதற்கான உரிமை கிடைத்ததும் அடுத்த மாத இறுதியிலிருந்து தடுப்பூசிகளை விநியோகம் செய்யத் திட்டமிடப்படுகிறது.

சுமார் 23,000 பேரிடம் சோதனை செய்யப்பட்டது AstraZeneca/Oxford தடுப்புமருந்து.

அது, சராசரியாக 70 விழுக்காட்டுத் தடுப்புசக்தி கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது.

மற்ற தடுப்புமருந்துகளைப் போலின்றி, AstraZeneca/Oxford தடுப்புமருந்தை மிகவும் குளிரான சூழலில் வைத்திருக்கத் தேவையில்லை.

அடுத்த ஆண்டு சுமார் 3 பில்லியன் தடுப்பூசிகளைத் தயாரிக்க AstraZeneca திட்டமிடுகிறது.

இந்தியாவில் அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் சுமார் 300 மில்லியன் பேருக்குத் தடுப்புமருந்து வழங்கப்படும் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னிலை ஊழியர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்