Images
  • Picture Story India
    (படம்: AFP / Arun SANKAR)

இந்தியா: இரண்டாம் கட்டமாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் விதிகள் அறிவிப்பு

இந்தியா, கிருமிப் பரவல் தொடர்பில் இரண்டாம் கட்டமாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் விதிகளை அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் 31 ஆம் தேதி அவை நடப்பில் இருக்கும்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், அதிகமான உள்நாட்டு விமானச் சேவைகளை இயக்க வாய்ப்புக் கிடைக்கும்.

பொருளியல் நடவடிக்கைகளுக்கு ஏதுவாக, நாட்டில் இரவு நேர ஊரடங்கு ஒரு மணி நேரம் தளர்த்தப்படும்.

இருப்பினும், பள்ளிக்கூடங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

நகர்ப்புற ரயில் சேவை தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருக்கும்.

இன்று பின்னேரம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உரையாற்றவிருக்கிறார்.

கிருமிப்பரவல் ஏற்பட்ட பிறகு 6ஆவது முறை, திரு. மோடி தேசிய உரையாற்றுகிறார்.  

Top