Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கட்சிக்கு, நான்கு மாநிலத் தேர்தல்களில் மூன்றில் தோல்வி

அங்கு பிரதமர் மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி இதுவரை ஆட்சியைக் கைப்பற்றியதில்லை.

வாசிப்புநேரம் -
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கட்சிக்கு, நான்கு மாநிலத் தேர்தல்களில் மூன்றில் தோல்வி

(படம்:AP Photo/Ashim Paul)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கட்சி, நான்கு மாநிலத் தேர்தல்களில் மூன்றில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

போட்டியிட்ட கட்சிகள், நோய்ப்பரவல் கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தாமல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டன.

குறிப்பாக மேற்கு வங்கத்தில் 34 நாள் காலக்கட்டத்தில் வாக்களிப்பு இடம்பெற்றது.

அந்த மாநில வரலாற்றில் ஆக நீண்ட பிரசாரமாக அது அமைந்தது.

அங்கு பிரதமர் மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி இதுவரை ஆட்சியைக் கைப்பற்றியதில்லை.

கட்சி கூடுதல் நாள் பிரசாரம் செய்யலாம் என்பதற்காகவே வாக்களிப்பு இவ்வளவு காலத்திற்கு நீட்டிக்கப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறையாகத் திருவாட்டி மமதா பானர்ஜி (Mamata Banerjee) தலைமையிலான திரிணாமுல் (Trinamool)காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவிருக்கிறது.

தமிழ்நாட்டில் திரு. மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

அஸ்ஸாமில் பாரதிய ஜனதாக் கட்சியும்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், அனைத்திந்திய NR காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் வெற்றி கண்டன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்