Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவின் சில இறக்குமதிப் பொருள்களுக்கு வரியை அதிகரிக்க இந்தியா திட்டம்

இந்தியா தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்காவின் 29 பொருள்களுக்கு வரியை அதிகரிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாசிப்புநேரம் -

இந்தியா தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்காவின் 29 பொருள்களுக்கு வரியை அதிகரிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரி அதிகரிப்பு தொடர்பாக கடந்த ஆண்டிலிருந்தே இந்தியா அதன் கருத்துகளைத் தெரிவித்து வந்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க இறக்குமதிகளுக்கு வரியை அதிகரிக்கவிருப்பதாக இந்தியா அறிவித்திருந்தது. அதன் பின்னர் அது தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது அமெரிக்கா இந்தியாவின் சில பொருள்களுக்குக் கடந்த மாதம் வரிவிலக்கு அளிப்பதை நிறுத்தியது. அதைத் தொடர்ந்து இந்தியாவும் தற்போது அமெரிக்க இறக்குமதிகள்மீது வரியை உயர்த்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

வரி அதிகரிப்பு இன்று முதல் நடப்பிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வரும் 28, 29ஆம் தேதிகளில் ஒசாக்காவில் நடைபெறவிருக்கும் G-20 மாநாட்டில் சந்தித்துப் பேசவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்