Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முதன்முறையாக இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், முதன்முறையாக இந்தியாவுக்கு 2 நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முதன்முறையாக இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம்

(படம்: Reuters)


அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், முதன்முறையாக இந்தியாவுக்கு 2 நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவும் அமெரிக்காவும் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்களில் நாளை கையெழுத்திடும் என திரு.டிரம்ப் கூறினார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், 100,000க்கும் அதிகமானோர் முன்னிலையில் உரையாற்றினர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 2 நாள் பயணத்தின் முதல் அங்கமாக அகமதாபாத் நகரில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு 10 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை வேறெந்த வெளிநாட்டுத் தலைவருக்கும் அவ்வாறு ஆடம்பரமான வரவேற்பு நல்கப்படவில்லை.

திரு. மோடி தமது உண்மையான நண்பர் என்று அதிபர் டிரம்ப் தமது உரையில் குறிப்பிட்டார்.

இருதரப்பு உறவு பல்வேறு அம்சங்களின் தொடர்பில் மோசமடைந்துள்ள நிலையில் அவரது இந்தியப் பயணம் அமைந்துள்ளது.

அமெரிக்க அதிபரின் இந்தியப் பயணம், இருநாட்டு உறவில் புதிய அத்தியாயம் என்று பிரதமர் மோடி புகழ்ந்துரைத்தார்.

அமெரிக்க அதிபருடன் அவரது துணைவியாரும் இந்தியா சென்றுள்ளார்.

தலைநகர் புதுடில்லிக்குச் செல்லும் முன்னர் அவர்கள் உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலுக்குச் செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்