Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இந்தியாவில் மாண்டோரின் சடலங்களை அப்புறப்படுத்தும் தொண்டூழியர்கள்

அது, மிகுந்த மனவேதனையைக் கொடுத்தாலும் அந்தப் பணியை முடிப்பதற்கு வலிமையுடன் இருக்கவேண்டியுள்ளதாகவும் கூறினர்.   

வாசிப்புநேரம் -
இந்தியாவில் மாண்டோரின் சடலங்களை அப்புறப்படுத்தும் தொண்டூழியர்கள்

(படம்: AFP/Sajjad HUSSAIN)

இந்தியா, இரண்டாம் கட்ட கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்தப் போராடும்வேளையில், மாண்டோரின் சடலங்களை அப்புறப்படுத்தும் பணியில், தொண்டூழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள், தாங்கள் எதிர்நோக்கும் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் உதவிக் கரம் நீட்டி வருகின்றனர்.

குறிப்பாக, இல்லங்களில் துணையின்றித் தனித்து மாண்டு கிடப்போரை, அவர்கள் எடுத்துச் சென்று ஈமச் சடங்குகளைச் செய்கின்றனர்.

தொண்டூழியர்கள் சிலர், தங்கள் சொந்த உறவினர்களின் சடலங்களையும் எடுத்துச் சென்று அப்புறப்படுத்த வேண்டியிருப்பதாகக் கூறினர்.

அது, மிகுந்த மனவேதனையைக் கொடுத்தாலும் அந்தப் பணியை முடிப்பதற்கு வலிமையுடன் இருக்கவேண்டியுள்ளதாகவும் கூறினர்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்