Images
  • oldest cave indonesian
    (படம்:AFP PHOTO / NATURE / LUC-HENRI FAGE/KALIMANTHROPE.COM)

இந்தக் குகை ஓவியம் தீட்டப்பட்டு எத்தனை ஆண்டு ஆகிறது தெரியுமா?

40,000 ஆண்டுகளுக்கு முன்னர் தீட்டப்பட்ட ஓவியம் ஒன்று இந்தோனேசியாவிலுள்ள குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குகையின் சுவரில் வரையப்பட்டுள்ள அது உலகத்தின் ஆகப் பழைமையான ஓவியமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 

போர்னியோவிலுள்ள அந்தக் குகையோவியம் ஒருவகை கால்நடையைச் சித்திரிக்கிறது.

அது எப்போது மனிதர்களால் தீட்டப்பட்டது என்பதை அதிநவீன தொழில்நுட்பத்தைக்கொண்டு அறிந்துகொள்ள முடிந்தது.

அதற்கு முன்னர், குகையோவியக் கலை ஐரோப்பாவில் தொடங்கியதாக நம்பப்பட்டது.

ஆனால், ஐரோப்பாவில் மட்டுமில்லாமல் உலகத்தின் மற்ற பகுதிகளிலும் அந்தக் கலை உருவெடுத்திருக்கலாம் என்பதற்கு இந்தப் புதிய கண்டுபிடிப்பு ஆதாரமாக உள்ளது.


 

Top