Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பூச்சிகளைக்கூட வெளிநாட்டுக்குக் கடத்துகிறார்களா?

பூச்சிகளைக்கூட வெளிநாட்டுக்குக் கடத்துகிறார்களா?

வாசிப்புநேரம் -

கொலம்பியத் தலைநகர் பொகோட்டாவில் உள்ள விமான நிலையத்தில் அதிகாரிகள் நூற்றுக்கணக்கான சிலந்திகளையும் பூச்சிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அந்தப் பூச்சிகளையும் சிலந்திகளையும் ஐரோப்பிய நாடுகளுக்குக் கடத்திச்செல்லத் திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது.

El Dorado விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டவற்றில் குறைந்தது 232 tarantula வகைச் சிலந்திகள், 67 கரப்பான்பூச்சிகள், 9 சிலந்தி முட்டைகள், ஒரு தேளும் அதன் 7 குட்டிகளும் இருந்தன.

அவை பயணப்பெட்டிக்குள் பிளாஸ்டிக் பொட்டலங்களில் பதுக்கிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன் தொடர்பில் இரு ஜெர்மானியர்கள் விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டனர். அவர்கள் கைதுசெய்யப்படுவர் என்று கூறப்பட்டது.

அந்தச் சிலந்திகளையும் பூச்சிகளையும் அவர்கள் கல்வி தொடர்பிலான காரணத்திற்காக வெளிநாட்டுக்குக் கொண்டுசெல்லவிருந்ததாகத் தெரிகிறது. இருப்பினும் அதற்கான சரியான உரிமமும் சான்றுகளும் அவர்களிடம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்