Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Instagramஇல் இணையவுள்ள பிரிட்டனின் உளவு அமைப்பு

பிரிட்டனின் உள்நாட்டு உளவுச் சேவையான MI5, தனது அதிகாரப்பூர்வ Instagram கணக்கைத் தொடங்கவுள்ளது.

வாசிப்புநேரம் -

பிரிட்டனின் உள்நாட்டு உளவுச் சேவையான MI5, தனது அதிகாரப்பூர்வ Instagram கணக்கைத் தொடங்கவுள்ளது.

@mi5official என்ற முகவரியில் திறக்கப்படவுள்ள அதன் கணக்கில், உளவு அமைப்பு குறித்த கட்டுக்கதைகள் பொய்யாக்கப்படும்.

மேலும், இதற்கு முன் யாரும் காணாத சில தகவல்களும் வெளியிடப்படும் என பிரிட்டனின் பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்தது.

உளவுத் துறையில் சேர விருப்பமா? MI5 அமைப்பு, சமூக ஊடகங்கள் மூலம் வேலை வாய்ப்புகளையும் பகிர்ந்துகொள்ளும் என்று சங்கம் கூறியது.

அமைப்பில் சேரும் சாத்தியமுள்ளோரை ரகசியமாக அணுகுவதற்குப் பெயர்போன MI5, அண்மை ஆண்டுகளாக வேலைக்கு ஆட்கள் தேவை என வெளிப்படையாக விளம்பரம் செய்து வருகிறது.

அமைப்பின் புதிய தலைமையின் கீழ் அந்த மாற்றங்கள் வந்துள்ளன.

பாரம்பரியமாக, ரகசியமாகச் செயல்பட்ட உளவு அமைப்பு, வெளிப்படையாக, புதிய வழியில் மக்களைச் சென்று சேர வேண்டும் என்று அதன் புதிய இயக்குநர் கென் மெக்கெல்லம் (Ken McCallum) குறிப்பிட்டார்.

- AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்