Images
  • intel (1)
    (படம்: REUTERS/Ronen Zvulun)

செயலிகளில் பாதுகாப்புக் குறைபாடுகளை சீர்செய்யும் மென்பொருளை இப்போது பயன்படுத்த வேண்டாம் : Intel நிறுவனம்

Intel நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் அதன் செயலிகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளை சீர்செய்யப் பயன்படுத்தும் மென்பொருளை இப்போதைக்குப் பயன்படுத்தவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

அந்த மென்பொருளிலும் சில குறைபாடுகள் இருப்பதே அதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. 

Wall Street Journal அதனைத் தெரிவித்தது. 

கடந்த ஒரு வாரத்தில் வெளியிடப்பட்ட பல அறிக்கைகளின் மூலம், Intel நிறுவனம் மூன்று பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்திருப்பதாக, அந்த நாளேடு கூறியது.

Intel நிறுவனம் ரகசியத்தன்மை வாய்ந்த ஓர் ஆவணத்தின் மூலம், அந்தத் தகவல்களை தனது வாடிக்கையாளர்கள் சிலரிடம் பகிர்ந்துகொண்டது.

கடந்த வாரம் கண்டறியப்பட்ட அந்தப் பாதுகாப்புக் குறைபாடுகளின் மூலம், கணினிகள், கைத் தொலைபேசிகள், இதர மின்னியல் சாதனங்களில் இருந்து, அந்தரங்கத் தகவல்களை இணைய ஊடுருவிகளால் பெறமுடியும் என்று Intel நிறுவனம் கூறியது.

உங்கள் கருத்து

Top