Images
  • Intelligent Crow
    (படம்: Instagram/Puy du Fou) 

கேளிக்கைப் பூங்காவில் குப்பைகளைப் பொறுக்க உதவும் காகங்கள்


ஃபிரான்சிலுள்ள பிரபலக் கேளிக்கைப் பூங்கா ஒன்று அவ்விடத்தைச் சுத்தப்படுத்த செய்த தேர்வு, காகங்கள்.

பி டு ஃபூ (Puy du Fou) எனும் அந்த கேளிக்கைப் பூங்கா, தரையில் வீசப்படும் சிகரெட் துண்டுகளையும் குப்பையையும் சுத்தப்படுத்த பயிற்சி பெற்ற 6 காகங்களை அடுத்த வாரம் அறிமுகப்படுத்தும்.

காகங்கள் குப்பை அல்லது சிகரெட் துண்டுகளைப் போடுவதற்குச் சிறிய பெட்டி ஒன்று அமைக்கப்படும். அவற்றினுள் குப்பையைப் பொறுக்கிப் போடும் காகங்களுக்குப் பரிசாக ஒரு தீனித் துண்டு கிடைக்கும்.

இடத்தைச் சுத்தப்படுத்துவது மட்டுமல்ல, சுற்றுச் சூழலைப் பாதுகாக்க இயற்கை வழிகளை நாடலாம் என்பதை இதன்மூலம் உணர்த்தவும் விரும்புவதாக பூங்கா கூறியுள்ளது.

காகங்களில் 'Rooks' ரக காகங்கள் அதிபுத்திசாலியானவையாகக் கருதப்படுகின்றன.

அவை மனிதர்களுடன் தொடர்புகொள்ள விருபம்பும் உயிரினங்கள் என்பதைப் பூங்கா நிர்வாகம் சுட்டிக்காட்டியது.


  

Top