Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பல்லாயிரக் கணக்கான வனவிலங்குகள் கடத்தப்படுவதிலிருந்து மீட்பு

உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் பல்லாயிரக் கணக்கான வனவிலங்குகள் கடத்தலில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளதாக அனைத்துலகக் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -
பல்லாயிரக் கணக்கான வனவிலங்குகள் கடத்தப்படுவதிலிருந்து மீட்பு

படம்: REUTERS

உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் பல்லாயிரக் கணக்கான வனவிலங்குகள் கடத்தப்படுவதிலிருந்து  மீட்கப்பட்டுள்ளதாக அனைத்துலகக் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

சிங்கப்பூரைத் தளமாக கொண்ட ஓர் அமைப்பு கொடுத்த தகவலின் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது, சந்தேக நபர்கள் சுமார் 600 பேரும் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

109 நாடுகளில் உலகச் சுங்க அமைப்பின் உதவியோடு (World Customs Organisation) சோதனைகள் நடத்தப்பட்டன.

23 குரங்குகள், 4,300 பறவைகள், 1,500 ஊர்ந்து செல்லும் விலங்குகள், 10,000 ஆமைகள் எனப் பல்வேறு பிராணிகள் சோதனைகளின்போது மீட்கப்பட்டன.

சுட்டவிரோதமாக இணையத்தில் விற்பனை செய்வதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 440 யானைத் தந்தங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்