Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

MH17 விமான விபத்து: 'ரஷ்யாவுக்குத் தொடர்பிருக்கலாம்' - விசாரணைத் தகவல்

மலேசிய ஏர்லைன்ஸிற்குச் சொந்தமான MH17 விமானம், 2014ஆம் ஆண்டு உக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தும் வழக்கறிஞர்கள், அதற்குப் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை ரஷ்யாவின் ஆயுதப் படையிடமிருந்து பெறப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
MH17 விமான விபத்து: 'ரஷ்யாவுக்குத் தொடர்பிருக்கலாம்' - விசாரணைத் தகவல்

கோப்புப் படம்: REUTERS/Maxim Zmeyev

மலேசிய ஏர்லைன்ஸிற்குச் சொந்தமான MH17 விமானம், 2014ஆம் ஆண்டு உக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தும் வழக்கறிஞர்கள், அதற்குப் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை ரஷ்யாவின் ஆயுதப் படையிடமிருந்து பெறப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

நெதர்லந்து தேசியக் காவல்துறையின் குற்றவியல் பிரிவுத் தலைவர் வில்பர்ட் பாலிசென் (Wilbert Paulissen) அவ்வாறு கூறினார்.

அந்த ஏவுகணை, ரஷ்ய ஆகாயப்படையின் 53ஆவது ஏவுகணை எதிர்ப்புப் பிரிவுக்குச் சொந்தமானது என்றார் அவர்.

அந்த ஏவுகணையை ஏற்றிச்சென்ற வாகனங்கள் அனைத்தும் ரஷ்ய ஆயுதப் படையைச் சேர்ந்தவை என்று கூறப்பட்டது.

இருப்பினும் அந்தச் சம்பவத்தில் தொடர்பிருப்பதாகக் கூறப்படுவதை ரஷ்யா மறுத்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்