Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மூன்று கேமராக்கள் கொண்ட புதிய iPhone அறிமுகம்

கைபேசி நிறுவனங்களிடையே நிலவும் கடுமையான போட்டிக்கு இடையே Apple நிறுவனம் அதன் புதிய iPhone வகையை அறிமுகம் செய்துள்ளது.

வாசிப்புநேரம் -
மூன்று கேமராக்கள் கொண்ட புதிய iPhone அறிமுகம்

(படம்: REUTERS/Stephen Lam)

கைபேசி நிறுவனங்களிடையே நிலவும் கடுமையான போட்டிக்கு இடையே Apple நிறுவனம் அதன் புதிய iPhone வகையை அறிமுகம் செய்துள்ளது.

மூன்று கேமராக்கள் கொண்ட புதிய திறன்பேசியுடன் மாதாந்திர இணைய ஒளிபரப்புச் சேவையையும் நேற்று (செப்டம்பர் 10) அறிமுகம் செய்தது நிறுவனம்.

இரு பின் கேமராக்கள் கொண்ட மேம்பட்ட iPhone 11 கைபேசிகளின் விலை 699 டாலர், கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்ட iPhone கைபேசிகளைவிட அதன் விலை குறைவாகவுள்ளது.

மூன்று பின் கேமராக்கள் கொண்ட iPhone 11 Proவின் விலை 999 டாலர். சற்று பெரிய திரையைக் கொண்ட iPhone 11 Pro Max 1,099 டாலருக்கு விற்பனையாகும். வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) முதல் கைபேசிகளுக்கு முன்பதிவு செய்யலாம். செப்டம்பர் 20ஆம் தேதியிலிருந்து அவை விநியோகம் செய்யப்படும்.

புதிய Apple TV+ ஒளிபரப்புச் சேவை நவம்பர் முதல் 100 நாடுகளில் அறிமுகம் செய்யப்படும். அதற்கான மாதக் கட்டணம் 5 டாலர் மட்டுமே. தற்போது இணைய ஒளிபரப்புச் சேவைகள் வழங்கும் Disney, Netflix நிறுவனங்களில் கட்டணங்களைவிட குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளர்களை ஈர்க்க முனைகிறது Apple.

iPhone, iPad, Mac கருவிகளை வாங்குபவர்களுக்கு ஓராண்டுக்கு Apple TV+ சேவை இலவசமாக வழங்கப்படும்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்