Images
  • iran
    படம்: Russian Foreign Ministry/Handout via REUTERS

ஈரானுடன் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட ஐக்கிய நாட்டு நிறுவனம் விதித்திருந்த தடை இன்றுடன் முடிவடைகிறது

ஈரானுடன் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட, ஐக்கிய நாட்டு நிறுவனம் விதித்திருந்த தடை இன்றுடன் காலாவதியாகிறது.

டெஹ்ரான் தனது தற்காப்புக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருக்கவில்லை என்று ஈரானிய வெளியுறவு அமைச்சு கூறியது.

உலக நிறுவனத் தடை நீக்கப்பட்டாலும், வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களை வாங்கும் நிலையில் ஈரான் இல்லை என்று அது குறிப்பிட்டது.

2015ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட அணுச்சக்தி ஒப்பந்தத்தின் கீழ், ஆயுதத் தடை இன்றுடன் காலாவதியாகும்.

2018ஆம் ஆண்டு அமெரிக்கா தன்னிச்சையாக அந்த உடன்பாட்டிலிருந்து விலகிக்கொண்டது.

ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் ஈரான் மீதான ஆயுத-விற்பனைத் தடையை நீட்டிக்கவேண்டும் என்று அமெரிக்கா பரிந்துரைத்தது. ஆனால் மன்றம் அதனை நிராகரித்தது.

அனைத்துலகத் தடைகள், ஆயுத விற்பனைத் தடை ஆகியவற்றுக்கிடையே, ஈரான் உள்நாட்டு ஆயுத உற்பத்தியைப் பெரிய அளவில் விரிவுபடுத்தியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Top