Images
  • Iran Missile
    (படம்: Reuters)

குறுகிய தூரம் செல்லும் ஏவுகணையை ஈரான் சோதனை

ஈரான், குறுகிய தூரத்துக்குச் செல்லக்கூடிய ஆற்றல் கொண்ட ஏவுகணையைச் சோதனை செய்திருக்கிறது.

கடற்படை பாவனைப் பயிற்சியின்போது, ஹொர்மோஸ் (Hormuz) நீரிணையில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஈரான்மீது அமெரிக்கா மீண்டும் தடைகளை விதித்ததற்குப் பதிலடியாக அந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், அது பாதுகாப்பற்ற வகையிலோ, வித்தியாசமான வகையிலோ செய்யப்பட்டதாகத் தகவல் ஏதும் இல்லை.

அந்த ஏவுகணை, ஈரானுக்குச் சொந்தமான கடற்பகுதியிலேயே பாய்ச்சப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

எண்ணெய் துறை உட்பட ஈரானின் முக்கியத் துறைகளைக் குறிவைத்து, அமெரிக்கா, ஈரான் மீது தடைகளை விதித்துள்ளது.

Top