Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஈரான் தொடர்பான அணுசக்தி குறித்த பேச்சில் கலந்துகொள்ள அமெரிக்கா ஒப்புதல்

ஈரான் தொடர்பான அணுசக்தி குறித்த பேச்சில் கலந்துகொள்வதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அழைப்பை எற்றுக்கொள்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
ஈரான் தொடர்பான அணுசக்தி குறித்த பேச்சில் கலந்துகொள்ள அமெரிக்கா ஒப்புதல்

(கோப்புப் படம்: REUTERS/Lisi Niesner)

ஈரான் தொடர்பான அணுசக்தி குறித்த பேச்சில் கலந்துகொள்வதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அழைப்பை எற்றுக்கொள்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரான் மீது ஐக்கிய நாட்டு நிறுவனம் மீண்டும் தடை விதிக்கவேண்டும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்த வேண்டுகோளை வெள்ளை மாளிகை மீட்டுக்கொண்டது.

அத்துடன், நியூயார்க்கில் ஈரானிய அரசதந்திரிகளின் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் அது தளர்த்தியது.

2015ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் சேரத் தயார் என்று பைடன் நிர்வாகம் முன்னதாகக் கூறியிருந்தது.

ஈரான் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடந்தால், அதன் மீதான தடைகளை அகற்றவும் அமெரிக்கா இணங்கியது.

அந்த விவகாரம் குறித்துக் கருத்துரைத்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜாவட் ஸரிஃப் (Javad Zarif), முதல் அடி எடுத்துவைப்பது அமெரிக்காவின் பொறுப்பு என்று கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்