Images
  • iran
    படம்: AP 

ஈரானின் ஏவுகணைத் தயாரிப்பை யாராலும் தடுக்க முடியாது: ஈரான் அதிபர்

ஈரானின் ஏவுகணைத் தயாரிப்புத் திட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று அந்நாட்டு அதிபர் ஹாசன் ரோஹானி (Hassan Rouhani) கூறியிருக்கிறார்.

ஈரானியப் புரட்சியின் 40ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

பகைமை பாராட்டும் நாடுகளின் நெருக்குதலுக்கு அடிபணியாமல், ஈரான் தொடர்ந்து அதன் இராணுவ வலிமையை விரிவுபடுத்துவதில் உறுதியாய் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா சென்ற ஆண்டு அணுச்சக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்ட பிறகு, அதிபர் டோனல்ட் டிரம்ப் ஈரான் மீது மீண்டும் தடை விதித்ததற்கு ஈரானிய அதிபர் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். 

Top