Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஈரானின் துணை சுகாதார அமைச்சருக்கு COVID-19 கிருமித்தொற்று

ஈரானின் துணை சுகாதார அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு COVID-19 கிருமி தொற்றியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. 

வாசிப்புநேரம் -
ஈரானின் துணை சுகாதார அமைச்சருக்கு COVID-19 கிருமித்தொற்று

(படம்: Iranian Presidency via AFP)

ஈரானின் துணை சுகாதார அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு COVID-19 கிருமி தொற்றியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. 

சீனாவிற்கு வெளியே, கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் ஈரானும் ஒன்று.

அங்கு, 95 பேர் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.

இருப்பினும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உண்மையில் இன்னும் அதிகம் என்றும், ஈரான் கிருமிப்பரவல் நிலவரத்தை மூடிமறைக்கிறது என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஈரானின் துணைச் சுகாதார அமைச்சர், ஈராஜ் ஹரிர்ச்சி (Iraj Harirchi) அந்தக் குற்றச்சாட்டைத் திங்கட்கிழமையன்று
மறுத்தார்.

அப்போது, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தது.

ஈரான் கிருமித்தொற்றைப் பற்றிய முக்கிய தகவல்களை மூடி மறைத்திருக்கலாம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ (Mike Pompeo) கவலை தெரிவித்தார்.

COVID-19 கிருமிப்பரவல் குறித்த உண்மையைக் கூறும்படி அனைத்து நாடுகளையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்