Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஈரான்: அமெரிக்கத் தடைகளால் எங்களின் எண்ணெய்த் துறை வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை

ஈரானிய எண்ணெய்த் துறைக்கு எதிராக அமெரிக்கா விதித்த தடைகளால் அது பாதிக்கப்படவில்லை என்று ஈரானியப் பெட்ரோலியத்துறை அமைச்சர் பிஜன் நம்தார் ஸங்கனே (Bijan Namdar Zanganeh) தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
ஈரான்: அமெரிக்கத் தடைகளால் எங்களின் எண்ணெய்த் துறை வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை

(படம்: REUTERS/Essam Al-Sudani/File Photo)

ஈரானிய எண்ணெய்த் துறைக்கு எதிராக அமெரிக்கா விதித்த தடைகளால் அது பாதிக்கப்படவில்லை என்று ஈரானியப் பெட்ரோலியத்துறை அமைச்சர் பிஜன் நம்தார் ஸங்கனே (Bijan Namdar Zanganeh) தெரிவித்துள்ளார்.

ஈரானிய எண்ணெய்த் துறையை முடக்க, அமெரிக்கா ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டும் அது நிறைவேறவில்லை என்றார் அவர்.

மாறாக, ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் செய்துகொண்ட குத்தகைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகத் திரு. ஸங்கனே குறிப்பிட்டார். அமெரிக்கத் தடைகளைத் தொடர்ந்து, ஈரானின் எண்ணெய், எரிவாயுத் துறைகளில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

அமெரிக்க நெருக்குதலுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது என்று இம்மாதத் தொடக்கத்தில் அவர் கூறியிருந்தார்.

ஈரான், எண்ணெயை ஏற்றுமதியைத் தடையின்றித் தொடரத் தன்னால் ஆன அனைத்தையும் செய்யுமென்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்கத் தடைகளைத் தொடர்ந்து, சென்ற நவம்பர் மாதம் ஈரானியக் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்குமேல் குறைந்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்