Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பாகிஸ்தான், ஈரானுடனான பெரும்பாலான எல்லைகள் முடக்கப்பட்டுள்ளன

பாகிஸ்தான், ஈரானுடனான ஒரே ஓர் எல்லையைத் தவிர மற்ற அனைத்து வழிகளையும் மூடியுள்ளது.

வாசிப்புநேரம் -
பாகிஸ்தான், ஈரானுடனான பெரும்பாலான எல்லைகள் முடக்கப்பட்டுள்ளன

(படம்: AFP/ATTA KENARE)

பாகிஸ்தான், ஈரானுடனான ஒரே ஓர் எல்லையைத் தவிர மற்ற அனைத்து வழிகளையும் மூடியுள்ளது.

ஈரான் COVID-19 கிருமிப்பரவலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் பாகிஸ்தான் அந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

பலுச்சிஸ்தான் (Baluchistan) எல்லையைத் தவிர மற்ற அனைத்து வழிகளையும் பாகிஸ்தான் மூடிவிட்டது.

ஈரானில் தற்போது, பாகிஸ்தானியர்கள் சுமார் 6,000 பேர் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

கிருமித்தொற்றுக்கு ஆளான சந்தேக நபர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக சிறப்பு மருத்துவ நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

எல்லை வழிகள், மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்