Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19: சிங்கப்பூர் உள்பட 7 நாடுகளிலிருந்து வரும் பயணி்களுக்கு ஈராக் பயணத்தடை

சிங்கப்பூர் உள்பட மேலும் ஆறு நாடுகளிலிருந்து வரும் பயணி்களுக்குப் பயணத்தடையை விரிவாக்கியுள்ளதாக ஈராக் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19: சிங்கப்பூர் உள்பட 7 நாடுகளிலிருந்து வரும் பயணி்களுக்கு ஈராக் பயணத்தடை

(படம்: AP/Anmar Khalil)

சிங்கப்பூர் உள்பட மேலும் ஆறு நாடுகளிலிருந்து வரும் பயணி்களுக்குப் பயணத்தடையை விரிவாக்கியுள்ளதாக ஈராக் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சீனா, ஈரான், தாய்லந்து, தென் கொரியா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருவோருக்குத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஈராக குடிமக்கள், அந்நாட்டு அரசதந்திரிகள், பிரதிநிதிகள் ஆகியோருக்கு விதிவிலக்கு உண்டு.

மக்களைப் பாதுகாப்பதற்காகவே அத்தகைய நடவடிக்கை என்றும், பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குச் செல்லவேண்டாம் என்றும் ஈராக்கிய சுகாதார அமைச்சு தெரிவித்தது.

நேற்று Najaf நகரில் ஒரு மாணவருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட பிறகு பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் பத்து நாள்களுக்கு மூடப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட இடத்துக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

மறுஅறிவிப்பு வரும் வரை ஈராக் முழுவதும் பொதுமக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்