Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கத் துருப்பினர் 11 பேர் காயம்

ஈரான் இம்மாதம் 8 ஆம் தேதி ஈராக்கிய ஆகாயப்படைத் தளத்தின் மேல் ஏவுகணைகளைப் பாய்ச்சியதில் அமெரிக்கத் துருப்பினர் 11 பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கத் துருப்பினர் 11 பேர் காயம்

(படம்: REUTERS/John Davison)

ஈரான் இம்மாதம் 8 ஆம் தேதி ஈராக்கிய ஆகாயப்படைத் தளத்தின் மேல் ஏவுகணைகளைப் பாய்ச்சியதில் அமெரிக்கத் துருப்பினர் 11 பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சியால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாய் அமெரிக்க ராணுவம் கூறியது.

சில வீரர்கள் சிகிச்சைக்காக ஜெர்மனி, குவைத் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

முன்னதாக அந்தத் தாக்குதலில் தமது படையினர் யாருக்கும் காயமில்லை என்று அமெரிக்கா கூறியிருந்தது.

இம்மாதம் 3ஆம் தேதி பாக்தாத் விமான நிலையத்தில் ஆளில்லா வானூர்தி மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானியத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

அதற்குப் பழிவாங்கும் நோக்கில் 8ஆம் தேதி ஈரான் அமெரிக்கத் துருப்பினர் தங்கியிருக்கும் Ain al-Asad ஆகாயப்படைத் தளத்தின் மேல் ஏவுகணைகளைப் பாய்ச்சியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்