Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் ஈராக்கிய ஆடவர் மீது ஆள்கடத்தல் குற்றச்சாட்டு

ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் ஈராக்கிய ஆடவர் ஒருவர் மீது ஆள்கடத்தல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் ஈராக்கிய ஆடவர் மீது ஆள்கடத்தல் குற்றச்சாட்டு

(படம்: AFP/TORSTEN BLACKWOOD)

ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் ஈராக்கிய ஆடவர் ஒருவர் மீது ஆள்கடத்தல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2001-ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்குள் அடைக்கலம் நாடிவந்த 350க்கும் அதிகமானோர் கடலில் மூழ்கி மாண்ட சம்பவத்தின் தொடர்பில்,
நேற்று அவர் பிரிஸ்பேன் விமான நிலையத்தில் கைதானார்.

நியூசிலந்திலிருந்து அவர் நாடுகடத்தப்பட்டார். ஆஸ்திரேலியக் குடிமக்கள் அல்லாதவர்களை நாட்டுக்குள் கடத்த முயன்ற குற்றச்சாட்டு அவர்மீது சுமத்தப்பட்டது.

2001ஆம் ஆண்டில் ஈராக்கையும் அஃப்கானிஸ்தானையும் சேர்ந்த 421பேரை இந்தோனேசிய மீன்பிடிக் கப்பலில் அவர் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அந்தக் கப்பல் கடலில் மூழ்கி 146 குழந்தைகள் உள்பட, 353 பேர் மாண்டனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்