Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மேற்கு ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்துள்ள ஆஸ்திரேலியாவின் முடிவு பொறுப்பற்றது: பாலஸ்தீனத் தலைவர்கள்

இஸ்ரேலின் தலைநகரமாக மேற்கு ஜெருசலத்தை அங்கீகரித்துள்ள ஆஸ்திரேலியாவின் முடிவு பொறுப்பற்றது என்று பாலஸ்தீனத் தலைவர்கள் சாடியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
மேற்கு ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்துள்ள ஆஸ்திரேலியாவின் முடிவு பொறுப்பற்றது: பாலஸ்தீனத் தலைவர்கள்

(படம்: AFP)

இஸ்ரேலின் தலைநகரமாக மேற்கு ஜெருசலத்தை அங்கீகரித்துள்ள ஆஸ்திரேலியாவின் முடிவு பொறுப்பற்றது என்று பாலஸ்தீனத் தலைவர்கள் சாடியுள்ளனர்.

அத்துடன், அந்த முடிவு ஐக்கிய நாட்டுத் தீர்மானத்தை மீறியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெருசலத்தின் மேற்குப் பகுதியில் தற்காப்பு, வர்த்தக அலுவலகத்தைத் திறக்கப்போவதாக ஆஸ்திரேலியா அறிவித்தது.

அமைதிப் பேச்சுக்கு ஊறு விளைவிக்காமல் இருக்க பெரும்பாலான நாடுகள் ஜெருசலத்திற்குத் தங்களின் தூதரகங்களை மாற்றுவதைத் தவிர்த்து வந்தன.

ஆனால், அமெரிக்கா தனது தூதரகத்தை அண்மையில் ஜெருசலத்திற்கு மாற்றியது.

அதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவும் மேற்கு ஜெருசலத்தைத் தலைநகரமாக அங்கீகரித்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்