Images
  • vaccine (4)
    (படம்: REUTERS/Dinuka Liyanawatte)

இஸ்ரேலில் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

இஸ்ரேலில் 5-இலிருந்து 11 வயது வரையிலான பிள்ளைகளுக்கு COVID-19 தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

அண்மையில் அதிகரித்துள்ள நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த அந்நடவடிக்கை உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

கடந்த சில நாள்களாக தினசரிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

அவற்றில் பாதிக்கு மேற்பட்ட சம்பவங்கள், பதினொன்று அல்லது அதற்குக் குறைவான வயதுடைய பிள்ளைகளுக்கு ஏற்பட்டவை.

சிறு வயதுப் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடுவது, முக்கியமாக அவர்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கே என்று கூறப்பட்டது.

COVID-19 காரணமாக அவர்களுக்குக் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதை அதிகாரிகள் சுட்டினர்.  

Top