Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இஸ்ரேல்: யூதர்கள் விழாவில் மிதிபட்டு மாண்டவர்களுக்காக தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது

இஸ்ரேலில் நடைபெற்ற யூதர்கள் விழாவில், நெரிசலில் மிதிபட்டு மாண்டவர்களுக்காக  இன்று தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -

இஸ்ரேலில் நடைபெற்ற யூதர்கள் விழாவில், நெரிசலில் மிதிபட்டு மாண்டவர்களுக்காக இன்று தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

மாண்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பொதுக் கட்டடங்களில் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

சென்ற வெள்ளிக்கிழமை நேர்ந்த அந்த விபத்தில் 45 ஆண்களும் சிறுவர்களும் மாண்டனர்.

இஸ்ரேலில் கொரோனா கிருமித்தொற்று காரணமாய் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் நடந்த யூதர்கள் விழாவில் 100,000 பேர் கலந்துகொண்டனர்.

அந்த விபத்துக்குத் தாமே பொறுப்பேற்பதாக இஸ்ரேலியப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஒஹானா (Amir Ohana) கூறினார்.

- AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்