Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இஸ்ரேல்: வெளிப்புறங்களில் முகக்கவசங்கள் அணியத் தேவையில்லை

இஸ்ரேல்: வெளிப்புறங்களில் முகக்கவசங்கள் அணியத் தேவையில்லை 

வாசிப்புநேரம் -

இஸ்ரேலிய மக்கள் வெளிப்புறங்களில் இனி முகக்கவசங்களை அணியத் தேவையில்லை.

ஓராண்டாக நடப்பிலிருந்த அந்தக் கட்டுப்பாட்டை அதிகாரிகள் நேற்றுத் தளர்த்தினர்.

எனினும் பொது இடங்களின் உட்புறங்களில் முகக்கவசங்களைக் கட்டாயமாக அணியவேண்டும்.

இஸ்ரேலிய மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமானோருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது.

இஸ்ரேலின் தடுப்பூசி இயக்கம் உலகிலேயே அதிவிரைவாக நடைபெற்ற ஒன்று எனக் கருதப்படுகிறது.

16 வயதுக்கு மேற்பட்ட இஸ்ரேலியக் குடிமக்களில் 81 விழுக்காட்டினருக்கு Pfizer/BioNTech தடுப்புமருந்து செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் தினந்தோறும் பதிவாகும் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை சுமார் 10,000-திலிருந்து இப்போது கிட்டத்தட்ட 200-க்குக் குறைந்துள்ளது.

அதனால் பள்ளிகள், மதுபானக் கூடங்கள், உணவகங்கள் ஆகியவை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.

எனினும் வெளிநாட்டினருக்கான கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

நாடு திரும்பும் இஸ்ரேலியக் குடிமக்கள், தடுப்பூசி போடாமல் இருந்தால் அவர்கள் சொந்தமாகத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெட்டன்யாஹு, கொரோனா கிருமியிடமிருந்து பாதுகாப்பு பெறுவதில் இஸ்ரேல் முன்னணியில் இருந்தாலும் கிருமிக்கு எதிரான போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்