Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஊழல், நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் இஸ்ரேலியப் பிரதமர்

இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெட்டன்யாஹு (Benyamin Netanyahu) ஊழல், நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

வாசிப்புநேரம் -

இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெட்டன்யாஹு (Benyamin Netanyahu) ஊழல், நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

அந்நாட்டு வரலாற்றில், பொறுப்பில் இருக்கும் பிரதமர் ஒருவர் குற்றஞ்சாட்டுகளை எதிர்நோக்குவது இதுவே முதல்முறை.

மூன்று வெவ்வேறு விவகாரங்களின் தொடர்பில், அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோடீஸ்வர நண்பர்களிடமிருந்து பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

செய்தித்தாள் பதிப்பகம் ஒன்றுக்கு வர்த்தகச் சலுகைகளை வழங்கியதும் குற்றச்சாட்டுகளில் அடங்கும்.

செய்தி இணையத்தளம் ஒன்றில், சாதகமான தகவல்கள் வெளியிடப்படுவதை உறுதிசெய்ய திரு நெட்டன்யாஹு தமது செல்வாக்கைப் பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

அந்தக் குற்றச்சாட்டுகள் காரணமாக, அவர் பதவி விலகத் தேவையில்லை.

இருப்பினும் தமது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள, அவர் கூடுதல் நெருக்குதலை எதிர்நோக்குகிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்