Images
  • singapore tourism
    (REUTERS/Feline Lim)

சிங்கப்பூருக்குச் செல்ல வேண்டாம் என்று பயண ஆலோசனை விடுத்துள்ள தென் கொரியா, இஸ்ரேல்

நொவல் கொரோனா கிருமித்தொற்று பரவிவருவதால், சிங்கப்பூருக்குச் செல்லவேண்டாம் என்று தென் கொரியாவும் இஸ்ரேலும் தங்கள் குடிமக்களை அறிவுறுத்தியுள்ளன.

இந்தோனேசியாவும், தைவானும் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வோர் முன்னெச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று பயண ஆலோசனை விடுத்துள்ளன.

தலைநிலச் சீனாவைத் தாண்டி, சிங்கப்பூர், மலேசியா, தாய்லந்து, வியட்நாம், ஜப்பான், தைவான் ஆகிய இடங்களுக்குச் செல்லவேண்டாம் என்று தென் கொரியா ஆலோசனை கூறியுள்ளது.

சிங்கப்பூர், தாய்லந்து, தென் கொரியா, ஜப்பான், தைவான், மக்காவ், ஹாங்காங் ஆகிய இடங்களுக்கான பயணத்தை மறு பரிசீலனை செய்யுமாறு இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் அதன் சுகாதார எச்சரிக்கை விழிப்புநிலையை ஆரஞ்சு நிறத்துக்கு உயர்த்தியது. அதனைத் தொடர்ந்து, மத்தியக் கிழக்கு நாடுகளான குவைத்தும், கத்தாரும் தங்கள் குடிமக்களிடம் சிங்கப்பூருக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கூறின.

சிங்கப்பூரில் தற்போதைய நிலவரப்படி 45 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் Grand Hyatt ஹோட்டலில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து, அதில் கலந்துகொண்ட மலேசியா, தென் கொரியா, பிரிட்டன் ஆகியவற்றைச் சேர்ந்தோருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.


 

Top