Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இஸ்ரேலில் பாதிக்கும் அதிகமானோருக்கு இரு முறை தடுப்பூசி போடப்பட்டது

இஸ்ரேல் மக்களில் பாதிக்கும் அதிகமானோருக்கு COVID-19 தடுப்பூசி இரண்டாம் முறையாகப் போடப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
இஸ்ரேலில் பாதிக்கும் அதிகமானோருக்கு இரு முறை தடுப்பூசி போடப்பட்டது

(கோப்புப் படம்: REUTERS/Amir Cohen)

இஸ்ரேல் மக்களில் பாதிக்கும் அதிகமானோருக்கு COVID-19 தடுப்பூசி இரண்டாம் முறையாகப் போடப்பட்டுள்ளது.

அதன் 9.3 மில்லியன் மக்கள்தொகைக்கு Pfizer நிறுவனத்தின் தடுப்பூசி போடும் திட்டம் சென்ற டிசம்பர் மாதத்திலிருந்தே தொடங்கியது. 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

இரண்டாம் தடுப்பூசி போடப்பட்ட ஒரு வாரத்திற்குப் பின், ஒருவர் முழுமையாகக் கிருமித்தொற்றிலிருந்து பாதுகாப்பபுப் பெற்றுள்ளதாகக் கருதப்படுவார்.

அவ்வாறு இருப்பினும், கிருமித்தொற்றுச் சூழலில் தொடர்ந்து சுகாதாரப் பரிந்துரைகளைப் பின்பற்றுமாறு இஸ்ரேலிய சுகாதார அமைச்சர் யூலி எடல்ஸ்டேன் (Yuli Edelstein) வலியுறுத்தினார்.

- Reuters/ta 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்