Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மேம்பாலச் சாலை இடிந்து விழுந்ததில் குறைந்தது 30 பேர் மரணம்

கார்களும் கனரகவாகனங்களும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருக்கலாம் என்று தீயணைப்புப் பிரிவு பேச்சாளர் AFPஇடம் தெரிவித்தார்.  

வாசிப்புநேரம் -
மேம்பாலச் சாலை இடிந்து விழுந்ததில் குறைந்தது 30 பேர் மரணம்

(படம்:AP)

 இத்தாலியில் மேம்பாலச் சாலை இடிந்து விழுந்ததைப் பெரும் பேரிடர் என்று அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சர் கூறியிருக்கிறார்.

குறைந்தது 30 பேர் மாண்டதாகவும் 20 வாகனங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோராண்டி (Morandi) பாலம் 650 உயரத்தில் உள்ளது. 

சுமார் 200 மீட்டர் தொலைவுள்ள பகுதி இடிந்துவிழுந்ததாக ஊடகங்கள் கூறின.

(படம்:AP)

ஜெனோவா (Genoa) நகரில் மேம்பாலச் சாலை இடிந்துவிழுந்ததில் பலர் மாண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

காலை 11.30 மணியளவில் பெய்த கனத்த மழையில் மேம்பாலச் சாலை, 100 மீட்டர் கீழே உள்ள ரயில்தடங்களின்மீது இடிந்துவிழுந்தது.
கார்களும் கனரகவாகனங்களும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருக்கலாம் என்று தீயணைப்புப் பிரிவுப் பேச்சாளர் AFPஇடம் தெரிவித்தார். 

(படம்:REUTERS)

பாலம் இடிந்துவிழும்போது அதில் 9 கார்கள்வரை இருந்திருக்கலாம் என்று சம்பவத்தை நேரில் கண்டவர் இத்தாலியத் தொலைக்காட்சியிடம் கூறியிருக்கிறார்.

 

இத்தாலியின் வடமேற்குப் பகுதியில் மலைகளுக்கும் கடலுக்கும் இடையே உள்ளது ஜெனோவா நகரம்.

(படம்:Twitter/Polizia di Stato)

இடிந்துவிழுந்த மேம்பாலச் சாலை 1960களில் கட்டப்பட்டது.
மறுசீரமைப்புப் பணிகள் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டன.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்